எமிக்கு போட்டியாக லண்டன் நடிகை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எமி ஜாக்ஸனுக்கு போட்டியாக தமிழுக்கு வருகிறார் இன்னொரு லண்டன் நடிகை. 'மதராஸ பட்டணம்' படத்தில் அறிமுகமானவர் எமி ஜாக்ஸன். இந்தி, தமிழ் என்று வரிசையாக நடித்து வரும் அவர் ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார். எமியை தொடர்ந்து மற்றொரு லண்டன் நடிகை அனாரா தமிழுக்கு வருகிறார். 'காதலே என்னை காதலி' என்ற படத்தில் அறிமுகமாகிறார். இதில் சந்தோஷ் ஹீரோ.

இதுபற்றி இயக்குனர் ஷான் கூறும்போது, ''லண்டன் பெண்ணை தமிழ் பையன் ஒருவன் காதலிக்கிறான். வெளிநாட்டு பெண்ணை காதலனின் பெற்றோர் ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் மனதை அனாரா எப்படி கவர்ந்து மருமகள் ஆகிறார் என்பது கதை. இதற்காக தமிழ் படத்துக்கு ஏற்ற ஹீரோயின் தேடினோம். லண்டன் பத்திரிகைகளில் ஹீரோயின் தேவை விளம்பரம் கொடுத்தோம். அதை பார்த்து 50 வெள்ளைக்கார பெண்கள் வந்தனர். அவர்களில் கருத்த கூந்தலுடன் தமிழ்ப் பெண் முகச்சாயலில் இருந்த அனாராவை தேர்ந்தெடுத்தோம். லண்டனிலேயே முழு படமும் ஷூட்டிங் நடந்துள்ளது. நிழல்கள் ரவி, மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆங்கில நடிகர் ராய் வில்லன். விமல் ராஜ் இசை. சரவணன் ஒளிப்பதிவு. பொன் சிவா துரை, அருண் கொலின், சண்முகநாதன் தயாரிப்பு.


 

Post a Comment