சிகரெட் புகை காட்சிக்கு கட் கொடுக்க மறுத்ததால் நான் ஈக்கு யு/ஏ

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : நானி, சமந்தா, சந்தானம் நடித்துள்ள படம், 'நான் ஈ'. இது தெலுங்கில் 'ஈகா' என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. பிவிபி சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுகிறது. அதை கட் பண்ண இயக்குனர் மறுத்துவிட்டதால் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதுபற்றி பிவிபி சினிமாவின் எக்ஸிகியூட்டிவ் இயக்குனர் ராஜீவ் கூறியதாவது:
கிராபிக்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதைப்படி ஒரு காட்சியில் சிகரெட் புகை முக்கிய பங்கு வகிக்கிறது. அதை கட் பண்ண சென்சார் அதிகாரிகள் கூறினர். அதை நீக்கினால் காட்சியின் முக்கியத்துவம் குறையும் என்பதால் மறுத்தோம். அப்படியென்றால் யு/ஏ சான்றிதழ்தான் கிடைக்கும் என்றனர். சரி என்றோம். வரும் 6ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
சர்வதேச தரத்தில் இந்த படத்தை ராஜமவுலி உருவாக்கியுள்ளார். டெக்னிக்கலாக இந்தப் படம் பேசப்படும் விதமாக இருக்கும்.
'இந்தப் படம் எதிர்பாராத உயரத்தை தொடும்' என்று இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறியுள்ளார். அது நிச்சயமாக நடக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு ராஜீவ் கூறினார்.


 

Post a Comment