ஹீரோயின்கள் நடிக்க மறுத்தால் புது ஹீரோயின்களை அறிமுகம் செய்வோம் என்றார் கருணாஸ். கருணாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் மச்சான். ஷக்தி சிதம்பரம் டைரக்ஷன். படம் பற்றி கருணாஸ் கூறியதாவது: இயக்குனர் ஷக்தி சிதம்பரமும், நானும் 10 ஆண்டு நண்பர்கள். நட்பை மையமாக வைத்து மச்சான் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படம் முழுக்க நகைச்சுவை இடம்பெறுகிறது. ஷூட்டிங்கிற்கு நாய், குதிரைகளை வாடகைக்கு விடும் அனிமல் அரசு என்ற வேடத்தில் நடிக்கிறார் விவேக். புதுச்சேரியில் இப்படத்தின் ஷூட்டிங் 35 நாட்கள் நடந்துள்ளது. பாடல் காட்சிகள் மலேசியா, ஹாங்காங், பாங்காக், புக்கட் ஆகிய இடங்களில் படமாக உள்ளது. கதைப்படி சிவப்பான ஹீரோயின் தேவைப்பட்டது. ஷெரில் பிரின்டோ நடிக்கிறார். ரமேஷ் அரவிந்த், மயில்சாமி, மூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தயாரிப்பு கே.பாலமுருகன். இசை ஸ்ரீகாந்த் தேவா. ஏற்கனவே திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தேன். தற்போது மச்சான், ரகள, சந்தமாமா உள்பட 5 படங்களில் ஹீரோவாக நடிக்கிறேன். காமெடி நடிகர்களுக்கு பிரபல ஹீரோயின் ஜோடியாக நடிக்க மறுத்து விடுவதுண்டு. எனக்கும் அப்படி நடந்திருக்கிறது. இப்போது அது உல்டாவாகி விட்டது. ஹீரோயின்கள் நடிக்க மறுத்தால் டி.ராஜேந்தர் பாணியில் புது ஹீரோயின்கள் உருவாக்குவோம்.
Post a Comment