மறைந்த நடிகர் ராஜேஷ் கன்னா தனது அனைத்து சொத்துக்களையும் 2 மகள்கள் பெயரில் உயில் எழுதி வைத்துள்ளார். உயிலில் மனைவி டிம்பிள் கபாடியா பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்திய திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்று புகழப்பட்ட நடிகர் ராஜேஷ் கன்னா கடந்த 18ம் தேதியன்று பாந்த்ராவில் உள்ள தனது ஆசீர்வாத் பங்களாவில் காலமானார். ராஜேஷ் கன்னா வுடன் ஆசீர்வாத் பங்களாவில் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்பட்டும் அனிதா அத்வானி என்ற பெண் ஆசீர்வாத் பங்களாவுக்கு உரிமை கோரி ராஜேஷ் கன்னா குடும்பத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கிடையே, ராஜேஷ் கன்னா பல ஆண்டுகளுக்கு முன்பே சொத்துக்கள் குறித்து தனது நம்பிக்கையான வழக்கறிஞர் மூலம் உயில் எழுதி வைத்திருந்தார். இந்த உயிலில், தனது அனைத்து சொத்துக்களையும் மகள்கள் டுவிங்கிள்(அக்ஷய் குமாரின் மனைவி), ரிங்கி ஆகியோர் பெயருக்கு எழுதி வைத்திருந்தார். இந்த உயிலில் மனைவி டிம்பிள் குறித்து குறிப்பிடவில்லை. ராஜேஷ் கன்னாடிம்பிள் தம்பதியர் திருமணமாகி 11 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். அதன்பிறகு பிரிந்து வாழ்ந்தாலும் கடைசிவரை விவாகரத்து கோரவில்லை. ராஜேஷ் கன்னாவின் கடைசி காலங்களில் டிம்பிள் அவரை அருகில் இருந்து கவனித்து கொண்டார்.
Post a Comment