தன்னை குடிகாரி என்று கூறியதை ஒரு வாரத்திற்குள் வாபஸ் பெறாவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்று நடிகை ஊர்வசி தனது முன்னாள் கணவர் மனோஜ் கே. ஜெயனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நடிகை ஊர்வசிக்கும், நடிகர் மனோஜ் கே. ஜெயனுக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு குஞ்ஞட்டா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஊர்வசி தன்னுடைய கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார். அவர்களது மகள் குஞ்ஞட்டா மனோஜுடன் அனுப்பப்பட்டார். ஆனால் தம்மிடம் மகளை ஒப்படைக்கக் கோரி ஊர்வசி எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குறிப்பிட்ட நாட்களில் மகளை ஊர்வசியுடன் அனுப்ப உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து மனோஜ் கே. ஜெயன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூலை 6ம் தேதி முதல் ஒரு வாரத்திறகு மகளை ஊர்வசியுடன் அனுப்ப உத்தரவிட்டது. இதன்படி மனோஜ் மகளை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தார். சிறிது நேரத்தில் ஊர்வசியும் அங்கு வந்தார். ஆனால் குஞ்ஞட்டா தாயுடன் செல்ல மறுப்பு தெரிவித்துவிட்டார். ஊர்வசி எப்போதும் போதையில் இருப்பதால் அவரை நம்பி மகளை ஒப்படைக்க முடியாது. இப்போதும் அவர் குடிபோதையில் தான் இருக்கிறார் என்று மனோஜ் கே ஜெயன் நீதிபதியிடம் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் தன்னை குடிகாரி என்று கூறியதை ஒரு வாரத்தில் வாபஸ் பெறாவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்று ஊர்வசி மனோஜ் கே. ஜெயனுக்கு வக்கீல் நோட்டீஸ அனுப்பியுள்ளார்.
Post a Comment