முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் விஜய், அடுத்து ஆண்டு கௌதம் மேனன் இயக்கும் 'யோஹன் : அத்தியாயம் ஒன்று' படத்தில் நடிக்கயிருக்கிறார். இது ஆக்ஷன் த்ரில்லர் படம் என்பதுதான் விஷேசம். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை காம்பினேஷனில் பாடல்கள் உருவாகின்றன. படத்தை கௌதம் வாசுதேவ் மேனனின் சொந்த நிறுவனமான ஃபோட்டான் கதாஸ் தயாரிக்கிறது. இதனையடுத்து, தற்போது தயாரித்து இயக்கி வரும் 'நீ தானே என் பொன்வசந்தம' படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்ட கௌதம் 'யோஹன் : அத்தியாயம் ஒன்று' படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளாராம். முதல் வேலையாக விஜய்-க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தேர்வு செய்ய இருக்கிறாராம். பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் அல்லது கரீனா கபூர் இவர்களில் யாரோ ஒருவர் தேர்வு ஆகலாம் என தெரிகிறது.
Post a Comment