குத்து பாடலுக்கு நடனம் ஆட மாட்டேன்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஐட்டம் நம்பர் எனப்படும் குத்து பாடலுக்கு நடனம் ஆட மாட்டேன் என்றார் ஸ்ருதி ஹாசன். இது பற்றி அவர் கூறியதாவது: பாலிவுட்டில் நான் அறிமுகமான 'லக்Õ படம் தோல்வி அடைந்தது பற்றி கேட்கிறார்கள். அப்படம் சரியாக ஓடவில்லை என்று எனக்கு தெரியும். ஆனால் தியேட்டரில் படம் ரிலீஸ் ஆனபோது ஒருவர்கூட தியேட்டரைவிட்டு பாதியில் எழுந்து செல்லவில்லை. இப்படம் ஓடாததற்கு காரணம் அதன் தலைவிதிதான். ஆனால் 'லக்Õ படத்தில் நடித்ததற்காக நான் வருந்தவில்லை. பெரிய நடிகரின் மகளாக பிறந்ததால் சினிமாவின் கதவு எனக்கு எப்போதுமே திறந்திருந்தது. அது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. பட வாய்ப்புகள் நிறைய வந்தாலும் நல்லவற்றை தேர்வு செய்து நடிக்கிறேன். என் அப்பாவிடம் படம் பற்றி கருத்து மட்டுமே கேட்பேன். பட வாய்ப்புகள் பெற்றுத்தர வேண்டும் என்று எந்த நேரத்திலும் அவரிடம் வற்புறுத்தியது கிடையாது. இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரும் என்னை கட்டாயப்படுத்தியதில்லை. குத்து பாடலுக்கு நடனம் ஆடுவீர்களா என்கிறார்கள். எனக்கு நடனம் பிடிக்கும். ஆனால் ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பை ஏற்க விரும்பவில்லை. அதுவும் குத்துபாட்டுக்கு கண்டிப்பாக ஆட மாட்டேன். இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.


 

Post a Comment