பயந்தாங்கொள்ளி கான்ஸ்டபிளாக கருணாஸ்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : கென் மீடியா சார்பில் கருணாஸ் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம் 'ரகளபுரம்'. அங்கனா, கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி, மனோபாலா உட்பட பலர் நடிக்கின்றனர். மனோ இயக்குகிறார்.
படம் பற்றி கருணாஸ் கூறியதாவது:
இதில் பயந்த சுபாவம் கொண்ட கான்ஸ்டபிளாக நடிக்கிறேன். பதவி உயர்வு பெற்றும் கடைசிவரை பயந்தாங்கொள்ளியாகவே இருக்கிறேன். நான் சீரியஸாகச் செய்யும் செயல்கள் எல்லாம் ரசிகர்களுக்கு காமெடியாக தெரியும். ஒரு கோழை எப்படி வீரனாகிறான் என்ற பார்முலா கதை என்றாலும், அதை காமெடி படமாக வழங்குகிறோம். 80 சதவீத ஷூட்டிங் முடிந்தது. கோவை சரளாவின் காமெடி நான்-ஸ்டாப்பாக சிரிக்க வைக்கும். என் மகன் கென், ஓப்பனிங் பாடலில் சமைரா கானுடன் ஆடியுள்ளான். என் மனைவி கிரேஸ், 'சூடாமணி கேட்டிலாலோ' பாடலைப் பாடியிருக்கிறாள்.  இதையடுத்து 'சந்தமாமா', 'மச்சான்' படங்களில் கதை நாயகனாக நடிக்கிறேன்.


 

Post a Comment