இந்தி படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்த ரஞ்சித் போஸ், 'மடிசார் மாமி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதுபற்றி ரஞ்சித் போஸ் கூறியதாவது: இந்தியில் சல்மான் கான் நடித்த 'லக்கி', பர்தீன் கான் நடித்த 'ஜானாசீன்', சோகைல்கான் நடித்த 'ஆர்யன்' உட்பட 27 படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளேன். இந்தியில் உருவான 'சாஞ்சா' என்ற படத்துக்கு எடிட்டிங் செய்யும்போது அதன் தயாரிப்பாளர் விவேக் தீஷ்சித் தமிழில் படம் பண்ண இருக்கிறேன். நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள் என்றார். 'மடிசார் மாமி' கதையை சொன்னேன். பிடித்திருந்தது. ஷூட்டிங் ஆரம்பித்து முடித்துவிட்டோம். இது காமெடி படம். நல்ல மெசேஜும் படத்தில் இருக்கிறது. மிதுன், ரிஷி, மான்சி, புனீத் உட்பட பலர் நடித்துள்ளனர். விரைவில் பாடல் வெளியீடு இருக்கிறது. இதையடுத்து அனிமேஷன் படம் ஒன்றை இயக்குகிறேன். இது முழுக்க முழுக்க வித்தியாசமான முயற்சி. இதில் நடிக்க முன்னணி ஹீரோ ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.
Post a Comment