பிரியதர்ஷன் இயக்கும் படத்தில் நடிக்கும் பிரியா ஆனந்துக்கு கண்டிஷன் போட்டார் இயக்குனர். நூற்றியெண்பது படத்தில் நடித்தவர் பிரியா ஆனந்த். இவர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான 'நாடோடிகள்' இந்தியில் உருவாகிறது. இப்படத்தை பிரியதர்ஷன் இயக்குகிறார். தமிழில் சசிகுமார் நடித்த வேடத்தை பாலிவுட் ஹீரோ ஜாக்கி பாகானி நடிக்கிறார். அனன்யா நடித்த வேடத்தில் பிரியா ஆனந்த் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். சாஜித்,வாஜித் இசை அமைக்கின்றனர். இப்படத்துக்கு தற்காலிகமாக 'ரன்கிரிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக சில வாரங்களுக்கு முன்பு பிரியா ஆனந்த் ஒப்பந்தம் ஆனார். அப்போது அவருக்கு பிரியதர்ஷன் படத்தின் கதை பற்றியும், படத்தை பற்றியும் யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். இதே நிபந்தனையை படத்தில் பங்கேற்கும் மற்றவர்களுக்கும் இயக்குனர் விதித்திருக்கிறார். இதுபற்றி பிரியா ஆனந்த் தரப்பில் கூறும்போது,நாடோடிகள் கதையை இந்தியில் இயக்குகிறார். ஒரு சில மாற்றங்கள் செய்தாலும் அதில் படத்தின் கரு எந்தவகையிலும் சிதையாமல் அமைத்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. அடுத்த மாதம் இறுதிவரை ஷூட்டிங்கில் பங்கேற்கிறார் பிரியா என்றனர்.
Post a Comment