பிரசன்னா மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை! - சினேகா

|

I Don T Like Be Prasanna Wife Sneha

ஏதாவது ஒன்றை நெகடிவாக சொல்லி பப்ளிசிட்டி தேடுவதை பிரசன்னாவும் - சினேகாவும் வழக்கமாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

இந்த முறை, எனக்கு பிரசன்னா மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை என்று கூறி, பின்னர் காதலியாக இருக்கத்தான் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார் சினேகா.

சமீபத்தில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் இருவரும் நடை போட்டனர். இதே பேஷன் ஷோவில் போன ஆண்டும் பங்கேற்றனர். ஆனால் அப்போது இருவருக்கும் காதல் என்ற விஷயம் கூட வெளியில் தெரிந்திருக்கவில்லை.

பேஷன் ஷோ முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய சினேகா கூறுகையில், "போன வருஷம் நாங்க இந்த நிகழ்ச்சியில் நடந்து வரும் போது காதலிச்சிகிட்டு இருந்ததே யாருக்கும் தெரியாது. போன வருஷம் காதலர்கள்; இந்த வருஷம் கணவன் மனைவியா நடந்துவர்றோம்," என்று ஆரம்பித்தார்.

"பிரசன்னாவோட மனைவியா எப்படி உணர்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, "பிரசன்னாவோட மனைவியா இருக்க எனக்கு விருப்பமில்லை. பிரசன்னாவோட மனைவியா இருக்குறதவிட, காதலியா இருக்கதான் ஆசைப்படுகிறேன்," என்றார்.

 

Post a Comment