டாப்ஸியை காதலிக்க போட்டி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
டாப்ஸியை காதலிப்பது யார் என்ற போட்டி ஏற்பட்டதால் 2 தெலுங்கு நடிகர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த மோதல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'ஆடுகளம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு வில்லன் நடிகர் மோகன்பாபு மகன் மனோஜ் மன்சுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி நடந்தது. இதில் மனோஜ் மன்சு, நடிகர் மஹத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அமைதியாக தொடங்கிய பார்ட்டியில் திடீரென்று மோதல் ஏற்பட்டது. மஹத்தை நோக்கி கோபத்துடன் பாய்ந்தார் மனோஜ், 'உன்னை தீர்த்துக்கட்டிவிடுவேன்' என்று எச்சரித்தாராம். இதனால் பார்ட்டியிலிருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து மஹத் அங்கிருந்து கோபமாக வெளியேறினார். இதுபற்றி மஹத் கூறும்போது, 'பார்ட்டியில் மோதல் சம்பவம் நடந்தது உண்மை. நான் நடிப்பில்தான் இப்போது தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறேன். மனோஜ் என் மீது கோபம் அடைவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை' என்றார்.

மனோஜ் மற்றும் அவரது சகோதரி லட்சுமி மன்சுக்கும் நெருக்கமானவர் டாப்ஸி. லட்சுமி தயாரிக்கும் படத்தில் மனோஜுடன் ஜோடியாக நடித்தும் வருகிறார். அவர்களுடனேயே ஐதராபாத்தில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் மனோஜுக்கும், டாப்ஸிக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே மஹத்துடன் டாப்ஸி நட்பாக பழகி வந்தார். பின்னர் அவருடனான நட்பை முறித்துக்கொண்டார். ஆனால் மஹத் அவரிடம் நட்பை தொடர முயற்சித்தாராம். இதானல்தான் மஹத் மீது கோபம் அடைந்து அவரிடம் மனோஜ் மோதியதாக  கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றி லட்சுமி மன்சு கூறும்போது,''மஹத் எங்களது நல்ல நண்பர். எந்த நேரத்திலும் அவரிடம் மனோஜ் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில்லை. நண்பர்கள் என்ற முறையில் அவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கலாம். பிறகு ஒன்றுசேர்ந்துவிடுவார்கள். ஆனால் யாரோ மனோஜ்-மஹத் மோதியதாக கதை கட்டிவிடுகிறார்கள். எதற்காக மஹத்தை மனோஜ் தாக்க வேண்டும்? சம்பவம் நடந்ததாக கூறப்படும் பார்ட்டியில் நானும் கலந்துகொண்டேன். ஆனால் மோதல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை. ஒரு கண்ணாடி டம்ளர் உடைந்தது போன்ற சத்தம்கூட என் காதில் விழவில்லை. மஹத் பார்ட்டியில் இருந்து புறப்பட்டு சென்ற பிறகுகூட நான் பார்ட்டி நடக்கும் இடத்தில்தான் இருந்தேன்'' என்றார்.


 

Post a Comment