பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் டோக்கியோவில் கோச்சடையான் ஆடியோ ரிலீஸ்!!

|

Kochadaiyaan Audio Launch Tokyo   
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் பட இசை வெளியீட்டை இந்த முறை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்துகின்றனர்.

ஆடியோ வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்தப் படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில், வைரமுத்து வரிகளில் 5 பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கும் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலை ரஜினியே பாடியுள்ளார்.

ரஜினியின் முந்தைய படமான எந்திரன் இசை வெளியீட்டை மலேசியாவில் சன் டிவி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

படத்தை சூப்பர் ஸ்டார் ரஜியின் பிறந்த நாளான 12.12.12-ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டனில் பிரிமியர் ஷோக்கள்

இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு டோக்கியோவில் என்றால், படத்தின் சிறப்புக் காட்சிகள் லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், சிங்கப்பூர் போன்ற நகரங்களில் நடக்கவிருக்கிறது.

இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னையில் பிரிமியர் ஷோக்களை நடத்தவிருப்பதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

100 சதவீதம் ஹாலிவுட் ஸ்டைலில் படத்துக்கு புரமோஷனல் வேலைகளைச் செய்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.

ரஜினி கலந்து கொண்ட கோச்சடையான் பிரஸ் மீட்டே லண்டனில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment