மங்காத்தா நடிகர் மகத்துக்கும், தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜுக்கும் இடையே ஏற்பட்டு அடிதடி ரகளை, கட்டிப்புரண்டு சண்டையால் நடிகர் சிம்பு டென்ஷனாகியுள்ளாராம். இருவருமே இவருக்கு நெருங்கிய நண்பர்களாம். இதனால் இருவருக்கும் இடையே பஞ்சாயத்துப் பேசி அமைதிப்படுத்த தீவிரமாக முயன்று வருகிறாராம்.
மங்காத்தாத படத்தில் நடிகர்களோடு நடிகராக நடித்த ஒருவர் மகத். இவரது பெயரும், முகமும் தமிழக மக்களில் எத்தனை பேருக்கு சரியாக நினைவருக்கும் என்பதே தெரியவில்லை. அதற்குள் தண்ணிப் பார்ட்டி, காதல், கலாட்டா, கட்டிப்புரண்டு சண்டை என்று பெரிய ரேஞ்சுக்குப் போய் விட்டார் இந்த சின்ன நடிகர்.
அதேபோல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு. இவரது பெயர் கலாட்டாவுக்குப் பின்னர்தான் தமிழக மக்களுக்கேத் தெரிய வந்துள்ளது. மேலும் இவர் மோகன்பாபுவின் மகன் என்பதும் கூட இப்போதுதான் பலருக்கும் புரிந்திருக்கிறது. இப்படிப்பட்ட இந்த இரு நடிகர்களும் சேர்ந்து குடித்து விட்டு போட்ட ஒரு காதல் சண்டையால் கோலிவுட்டே நாறிப் போய்க் கிடக்கிறது.
சினிமாக்காரர்கள் ஒரு இடத்தில் கூடினாலே தண்ணிதான், சண்டைதான், காதல்தான், கலாட்டாதான் என்ற நிலையை இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது மகத்துக்கும், மனோஜுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வர நடிகர் சிம்பும் களம் இறங்கியுள்ளாராம். இருவருக்கும் அவர் நெருங்கிய நண்பராம். இதனால் இருவரிடமும் தொடர்ந்து பேசி வருகிறாராம். இவரது பஞ்சாயத்துப் பேச்சுவார்த்தைக்குப் பலன் ஏதும் கிடைத்ததா என்பது குறித்துத் தகவல் இல்லை.
Post a Comment