டைட்டானிக் படத்தின் ஷூட்டிங்கின்போது நாயகி கேட் வின்ஸ்லெட்டின் கைகளில் முடி இருந்ததால், அதை ஷேவ் செய்து பின்னரே படப்பிடிப்பை நடத்தினாராம் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். இதை கேட்டே சொல்லியுள்ளார்.
1997ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் டைட்டானிக். நிஜ டைட்டானிக் கப்பலைப் பற்றிய ஒரு கற்பனைக் கதைதான் டைட்டானிக். இப்படத்தில் நாயகியாக நடித்தவர் பிரிட்டிஷ் நடிகை கேட் வின்ஸ்லட். படப்பிடிப்பின்போது நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களை அசை போட்டுள்ளார் கேட்.
இதுகுறித்து அவர் கூறியதாவது...
படத்தில் இரவு நேர காட்சிகளைப் படமாக்கியபோது ஜேம்ஸ் கேமரூனுக்கு ஒரு சிக்கல் தெரிந்தது. அதாவது எனது கை மற்றும் அக்குள் பகுதியில் லேசாக முடிகள் இருந்ததால் அவர் தயங்கினார். காட்சியை அவை பாழ்படுத்துவதாக உணர்ந்தார்.
இதையடுத்து என்னிடம் வந்த அவர் உனக்கு நாங்கள் ஷேவ் செய்யப் போகிறோம் என்றார். எனக்கோ சிரிப்பாக வந்தது. ஆனால் அவர் சீரியஸாக இருக்கிறார் என்பது பின்னர்தான் தெரிந்தது. மேக்கப்மேன் கையில் பிளேடு மற்றும் ஷேவிங் கிரீமுடன் வந்து நின்றார். பிறகு எனக்கு ஷேவ் செய்தார். படு நகைச்சுவையாக இருந்தது அது. நீட்டாக ஷேவ் செய்த பின்னர்தான் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தினார் கேமரூன்.
அப்போது கடும் குளிர் நிலவியது. என்னால் அதைத் தாங்க முடியவில்லை. என்னை விட நாயகன் லியோனார்டோ டிகாப்ரியோதான் குளிரைத் தாங்க முடியாமல் நடுங்கினார். 21 வயதான அவரைப் பார்த்தபோது எனக்கு ஒரு குழந்தை போலத்தான் தெரிந்தார் என்றார் சிரித்தபடி.
டைட்டானிக் படத்தில் கேட் நடித்தபோது அவருக்கு வயது 20தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment