எம்.கே.என்டர்பிரைசஸ், நேசிகா திரையரங்கம் இணைந்து தயாரிக்கும் படம் 'பாண்டி ஒலிபெருக்கி நிலையம்'. சபரீஷ், சுனேனா, கருணாஸ், தம்பி ராமையா, சிங்கம்புலி நடிக்கிறார்கள். கவி.பெரியதம்பி இசை அமைத்துள்ளார். ராசு மதுரவன் இயக்கியுள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, பி.எல்.தேனப்பன், கதிரேசன், மன்னன், இயக்குனர்கள் வெற்றிமாறன், பிரபுசாலமன், கிச்சா, எழில், ரவிமரியா உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், ராசு மதுரவன் கூறியதாவது: திண்டுக்கல்லில் ஒலிபெருக்கி நிலையம் நடத்தும் ஒருவன் வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அது அவனது பாதையை எப்படி திருப்பி போடுகிறது என்பதுதான் கதை. காமெடி, காதல், ஆக்ஷன் கலந்த கமர்சியல் கதை. என்றாலும் சென்டிமென்டும் இருக்கும். எனது படங்களில் சென்டிமென்ட் இருப்பதற்கு காரணம், அது இல்லாமல் வாழ்க்கை இல்லை. வாழ்க்கையின் பிரதிபலிப்புதான் சினிமா. அனிமேஷன், கிராபிக்ஸ் படங்களில்கூட சென்டிமென்டே பிரதானமாக இருக்கும்.
Post a Comment