புதிதாக ‘ஹூண்டாய் வெர்னா ஃப்ளூடிக்' காரை வாங்கியிருப்பதால் சந்தோசத்தில் இருக்கிறார் ரதி. அவரது நீண்ட நாள் ஆசை இதன் மூலம் நிறைவேறியிருக்கிறதாம்.
சொல்ல மறந்த கதை உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை ரதி அதன் பிறகு பல படங்களில் நடித்தார். சத்யராஜுடனும் கூட ஒரு படத்தில் நடித்தார். அப்படத்தில் சத்யராஜுடன் சேர்ந்து திருடா திருடியில் வந்த சூப்பர் ஹிட் பாடலான மன்மதா ராசா பாடலுக்கு அசத்தலான குத்தாட்டமும் போட்டுக்கலக்கினார்.
ஆனால் போகப் போக இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போய் விட்டன. இதனால் சொந்த ஊரான பெங்களூருக்கேத் திரும்பிப் போனார்.
இந்த நிலையி்ல தற்போது டிவி பக்கம் திரும்பியுள்ளார். தற்போது ஜெயா டிவியில் பாலசந்தர் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் சாந்தி நிலையம் தொடரில் முக்கியப் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிக்கும்போதே கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது என்று கூறி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் ரதி. புதிதாக வாங்கியுள்ள ‘ஹூண்டாய் வெர்னா ஃப்ளூடிக்' கார் தனக்கு பிடித்த மெட்டாலிக் க்ரே கலரில் அமைந்திருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார் ரதி.
Post a Comment