பிரபாகரன் ஆன களஞ்சியம்!

|

Tamil Cinema Tidbits   

கருங்காலி என்று ஒரு படம் வந்தது நினைவிருக்கலாம். அஞ்சலி, சுனிதா வர்மாவுடன் இயக்குநர் மு களஞ்சியம் நடித்து இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்கிறார் களஞ்சியம். தெலுங்கு பட உலகுக்கு களஞ்சியம் என்ற பெயர் ரொம்ப அந்நியமாக இருந்ததால், தன் பெயரை பிரபாகரன் என மாற்றிக் கொண்டுள்ளாராம்.

படத்துக்குப் பெயர் என்ன தெரியுமா... 'சதிலீலாவதி 2012.'

மீண்டும் அர்ஜூன் - கிச்சா!

மாசி படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர் அர்ஜூனும் இயக்குநர் கிச்சாவும். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை பிரமாண்டமாக தயாரித்து இயக்கப் போகிறாராம் கிச்சா.

அதற்கு முன் தனது தயாரிப்பான எப்படி மனசுக்குள் வந்தாய்? படத்தை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்.

கிருஷ்ணாவின் 'நெடுஞ்சாலை'!

சூர்யா - ஜோதிகாவை வைத்து சில்லுன்னு ஒரு காதல் என்ற படத்தை இயக்கியவர் கிருஷ்ணா. அதன் பிறகு இப்போதுதான் மீண்டும் படம் இயக்குகிறார். படத்தின் பெயர் நெடுஞ்சாலை. ஆரி - ஷிவதா நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து 32 நாட்கள் நடத்தியுள்ளார்.

மலையாள நடிகர் சலீம்குமாரின் நகைச்சுவையும், பாலிவுட் நடிகர் பிரசாந்த் நாராயணனின் வில்லத்தனமும் பெரிதும் பேசும் என்கிறார் கிருஷ்ணா.

 

Post a Comment