சன் டிவியில் இந்த வாரம் இளையராஜா-விஜய் இணைந்து கலக்கிய காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ்!

|

Vijay Week Sun Tv

சன் டிவியில் தற்போது விஜய் வாரம் தொடங்கியுள்ளது. அமர்க்களமான ஐந்து சூப்பர் ஹிட் விஜய் படங்களை இந்த வாரத்தில் சன் டிவியில் காட்டுகின்றனர். அதில் இசைஞானி இளையராஜாவின் இசைமழையில் உருவான காதலுக்கு மரியாதை மற்றும் பிரண்ட்ஸ் ஆகிய இரு படங்களும் ரசிகர்களை குதூகலிக்கக் காத்துள்ளன.

நேற்று தொடங்கிய விஜய் வாரத்தில் இன்று பாடல்களுக்குப் பெயர் போன துள்ளாத மனமும் துள்ளும் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

புதன்கிழமையான நாளை காதலுக்கு மரியாதை ஒளிபரப்பாகிறது. விஜய்க்கு புதிய முகம் கொடுத்த படம் இது. கதைக்காகவும், நடிப்புக்காகவும் ஓடிய படம் என்றாலும், இசைஞானி இளையராஜாவின் இன்னிசையை ரசிகர்கள் இன்று வரை மறக்கவில்லை. ஒவ்வொரு பாடலும் ஒரு லட்டு என்ற கணக்கில், படம் முழுக்க ராஜாவும் சேர்ந்து நடை போட்டதை ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசித்தனர் என்பது நினைவிருக்கலாம்.

வியாழக்கிழமை விஜய், தேவயானி, ரம்பா நடித்த நினைத்தேன் வந்தாய் ஒளிபரப்பாகிறது.

வெள்ளிக்கிழமைதான் ஹைலைட் படம். விஜய்யின் அட்டகாச நடிப்பு, வடிவேலுவின் அதிரிபுதிரி காமெடி, முத்தாய்ப்பாய், இளையராஜாவின் இசை என படம் முழுக்க திருவிழாக் கோலம்.

எந்தப் படத்தைப் பார்க்க மறந்தாலும் மறக்காமல் பிரண்ட்ஸை பார்த்து விடுங்கள், சிரிச்சு சிரிச்சு கவலை மறந்து ராத்திரி நன்றாக தூங்கலாம்...

 

Post a Comment