பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டுக்குள் மர்ம நபர் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா மற்றும் பேத்தி ஆராத்யா ஆகியோருடன் மும்பை ஜுஹு பகுதியில் உள்ள ஜல்சா என்ற வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீ்ட்டிற்கு பாதுகாவலர்கள் இருந்தும் நேற்று மர்ம ஆசாமி ஒருவன் புகுந்துவி்ட்டான்.
இது குறித்து அமிதாப் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது,
மர்ம நபர் அத்துமீறு வீட்டுக்குள் நுழைந்ததால் நேற்று பரபரப்பாக இருந்தது. அந்த நபர் தற்போது போலீஸ் பிடியில் உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பான ஜல்சாவுக்குள்ளேயே நுழைந்துவி்ட்டார். என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் எதுவும் பாதுகாப்பில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பச்சன் குடும்பத்திற்கு ஜுஹு பகுதியில் மட்டும் ஜல்சா, பிரதீக்ஷா மற்றும் ஜனக் ஆகிய 3 வீடுகள் உள்ளன. அதில் ஜல்சாவில் அமிதாப் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பிரதீக்ஷாவில் அமிதாபின் தம்பி அஜிதாப் வசிக்கிறார். ஜனக் பச்சன் குடும்பத்தாரின் அலுவலகமாக உள்ளது. அந்த வீட்டில் உள்ள ஜிம்மைத் தான் பச்சன் குடும்பத்தினர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
Post a Comment