துப்பாக்கி சண்டை இன்னும் தீவிமடைஞ்சிருக்கு... முதலில் தம் போஸ்டருக்கு பிரச்சினை வந்து, அது ஓய்ந்த கையோடு டைட்டிலுக்கு மோதல் வந்தது.
கள்ளத் துப்பாக்கி படக்குழுவினர் போட்ட வழக்கால், விஜய்யின் துப்பாக்கி தலைப்புக்கே தடை வந்துவிட்டது.
ஆனாலும் கள்ளத்துப்பாக்கி எங்க நல்ல துப்பாக்கியை என்ன செய்யும்? என முஷ்டியை மடக்கி களமிறங்கியுள்ளார் கலைப்புலி தாணு.
உண்மையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் ஜெமினி நிறுவனம்தானாம். கலைப்புலி பர்ஸ்ட் காப்பி அடிப்படையில்தான் தயாரிக்கிறாராம்.
படத்தயாரிப்புக்கென்று ஆரம்பத்தில் ஜெமினி கொடுத்த தொகைக்கான செக் வங்கியில் செல்லாமல் போக, சட்டென்று தன் பணத்தையே முதலீடு செய்து முழு தயாரிப்பாளரானார் தாணு.
இப்போது படம் நன்றாக வந்திருப்பதால், மீண்டும் படத்துக்கு ஜெமினி சொந்தம் கொண்டாட, தயாரிப்பு செலவுத் தொகையை எண்ணி வைத்துவிட்டு வாங்கிட்டுப் போங்க என்றாராம் தாணு. அந்தத் தொகை, ஜெமினி திட்டமிட்டதைவிட மிக அதிகமாம்.
தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தரலாமா என்று யோசித்திருக்கிறது ஜெமினி. ஆனால் அங்கே முக்கிய பதவியில் இருப்பவரே தாணுதானே... சங்கத் தலைவர் எஸ்ஏசி மகன் விஜய் படம் வேறு.
விஷயத்தைக் கேள்விப்பட்ட சங்க நிர்வாகிகள் பலரும், 'நல்லா வேணும்யா. எத்தனை இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டாங்க. இப்ப படட்டும். தாணு பக்கம்தான் நியாயம். படத்தை அவருக்கே கொடுத்துட்டுப் போகட்டும் ஜெமினி," என்று கூற ஆரம்பித்திருப்பதை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது ஜெமினி.
Post a Comment