ஆடிமாதம் என்றாலே அம்மன்கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். கூழ் ஊற்றுவது, பூக்குழி இறங்குவது என பக்தியில் திளைத்திருப்பார்கள். அதை கவனத்தில் கொண்டு ஆன்மீக ரசிகர்களை கவரும் வகையில் களம் இறங்கியிருக்கிறது ராஜ் டிவி.
ஆடிமாதம் முழுவதும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை ராஜ் டிவியில் பிற்பகல் 1.30 மணிக்கு பக்தித் திரைப்படங்களாக உலாவரப்போகின்றன. ஆடி முதல்நாளான இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ரம்யா கிருஷ்ணன், வடிவேலு நடித்த ஸ்ரீ ராஜராஜேஸ்வரி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
அம்மன் திரைப்படங்களுக்கு என்று குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். பொட்டு அம்மன், ராஜகாளியம்மன், ஆடிவெள்ளி, அம்மன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி உள்ளிட்ட திரைப்படங்கள் அந்த சீசனுக்கு தகுந்து வெற்றியை தேடித்தந்தவை. அது போன்ற பல அம்மன் திரைப்படங்களை ஆடி மாதம் முழுவதும் பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் டிவியில் கண்டு ரசிக்கலாம்.
Post a Comment