மும்பை: தான் நடிக்கும் புதுப்படத்தின் நாயகனின் தீவிர ரசிகைகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக டெல்லி பெல்லியில் நடித்த இந்தி நடிகை ஷேனாஸ் ட்ரஷரிவாலா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் இம்ரான் கானின் டெல்லி பெல்லி படத்தில் நடித்தவர் நடிகை ஷேனாஸ் ட்ரஷரிவாலா. அவர் தற்போது மெய்ன் அவுர் மிஸ்டர் ரைட் என்ற இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பில் இருக்கும்போது தைரியமாக காணப்படும் அவர் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்றாலே பயப்படுகிறார். அதற்கு கதாரணம் படத்தின் ஷேனாஸ் ஜோடியாக நடிக்கும் பருண் சோப்தியின் தீவிர ரசிகைகள்.
பருண் சோப்தி பியார் கோ க்யா நாம் டூன்? என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர். அந்த நிகழ்ச்சியை நடத்தும் அவருக்கு எக்கச்சக்க ரசிகைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் பாலிவுட்டில் நடிப்பதற்காக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாகத் தகவல்கள் வெளியானது. இதைக் கேட்ட அவரது ரசிகைகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவர்கள் தான் தனக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுவதாக ஷேனாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து ஷேனாஸ் கூறுகையில்,
நான் பருணை அவர்களிடம் இருந்து பிரிப்பதாக அவரது ரசிகைகள் நினைக்கின்றனர். அவர்களுக்கு பருண் என்றால் உயிர். அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக நினைத்து எனக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுகின்றனர். அவர்கள் பருணுக்காக எதையும் செய்வார்கள் என்றார்.
Post a Comment