இந்திப் படம் ஒன்றில் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக நடிக்கிறார் தமிழ் நடிகை குஷ்பு.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையான குஷ்பு, இப்போது தி.மு.க.வில் சேர்ந்து அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி வருகிறார்.
நல்ல வாய்ப்புகளாக இருந்தால் மட்டுமே அவர் படங்களில் நடிக்கிறார். அதே நேரம், கணவர் இயக்கத்தில் படங்கள் தயாரிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் 'மேட் டாட்' (Mad Dad) என்ற இந்திப் படத்தில் குஷ்பு நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளார். இதில் அமிதாப்பச்சன் ஜோடியாக நடிக்கிறாராம்.
அமிதாப்புடன் நடிக்க வந்திருக்கும் இந்த வாய்ப்பு, தன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
'சிறு வயதிலிருந்தே அமிதாப்பின் தீவிர ரசிகை நான். அவர் படங்களை ஒன்று விடாமல் பார்ப்பேன். இப்போது அமிதாப் ஜோடியாக நடிக்க வந்துள்ள வாய்ப்பு சந்தோஷத்தின் உச்சிக்கு கொண்டு போய்விட்டது," என்றார்.
Post a Comment