செல்வராகவன் இயக்கும் "பொன்னியின் செல்வன்"?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு, தமிழில் முன்னணி நடிகர்களான விக்ரம், ஆர்யா மற்றும் ஜீவா போன்றோரை ஒரே படத்தில் இணைந்து நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளார் செல்வராகவன். தனது அடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பை ரகசியமாக வைத்துக் கொள்வது தான் செல்வராகவனின் வழக்கம். ஆனால் முதல் முறையாக தனது அடுத்தபடம் பற்றி ட்வீட் செய்திருக்கிறார் செல்வராகவன். மிகவும் பிரபலமான நாவலான பொன்னியின் செல்வனை தான் படமாக்க ஆசைப்படுவதாக செல்வராகவன் கூறியுள்ளார். அதில் 'இராஜ இராஜ சோழனாக' விக்ரமும், 'ஆதித்த கரிகாலனாக' ஆர்யாவும், 'வல்லவரையன் வந்திய தேவனாக' ஜீவாவும் நடித்தால் நன்றாக இருக்கும் என செல்வராகவன் கூறியுள்ளாராம். அதே போல் குந்தவையாக காஜல் அகர்வாலும், நந்தினியாக நயன்தாராவும் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என செல்வராகவன் கூறியுள்ளாராம். செல்வராகவனின் இந்த கற்பனை நிஜமாக்குவாரா என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.


 

Post a Comment