மீரா ஜாஸ்மினுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் அனைத்தும் ரீமா கல்லிங்கலுக்கு கைமாறி வருகிறது. தமிழில் 'யுவன் யுவதிÕ படத்தில் நடித்தவர் மல்லுவுட் நடிகை ரீமா கல்லிங்கல். தற்போது மலையாள படங்களில் மட்டும் நடித்து வருகிறார். கைநிறைய படங்களுடன் நடித்து வந்த மீரா ஜாஸ்மின் குடும்ப பிரச்னை, மாண்டலின் ராஜேஷுடன் காதல் விவகாரம் என பிரச்னைகளில் சிக்கியதால் படங்களில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறார். மலையாள ரசிகர்களை கவர்ந்த காவ்யா மாதவன் திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். மீண்டும் நடிக்க வந்த அவர் ஒரு சில படங்களை மட்டுமே ஏற்கிறார். அசின், நயன்தாரா, கார்த்திகா, பத்மப்ரியா உள்ளிட்ட பல மல்லுவுட் நடிகைகள் மலையாளத்தில் நடிப்பதைவிட பிறமொழி படங்களிலேயே கவனம் செலுத்துகின்றனர். இதற்கு காரணம் மல்லுவுட்டில் கிடைக்கும் சம்பளத்தைவிட பல மடங்கு அதிகமாக பிறமொழிகளில் கிடைப்பதுதான். இதனால் மலையாள படவுலகில் ஹீரோயின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழல் மட்டுமல்லாமல், சமீபத்தில் வெளியான '22 பிமேல் கோட்டயம்Õ என்ற படத்தில் ரீமா கல்லிங்கல் நடிப்பு பாராட்டு பெற்றது. இதையடுத்து மீரா ஜாஸ்மினுக்கு சில பட வாய்ப்புகள் சென்றது. அவர் பதில் சொல்லாமல் இழுத்தடித்தாராம். இதை பயன்படுத்தி தனது மேனேஜர் மூலம் தூதுவிட்ட ரீமா, அந்த வாய்ப்புகளை பிடித்ததாக கூறப்படுகிறது. இப்போது இவர் நடித்த 6 படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது. இதில் 3 படங்களில் மீரா நடிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment