திரும்பிப் பார்க்கிறேன் மூலம் திரும்பவரும் நடிகை ரஞ்சனி

|

Actress Ranjani Come Back Jaya Tv Program

பாரதிராஜாவால் அறிமுகமான நடிகை ரஞ்சனி திருமண வாழ்க்கையில் செட்டில் ஆன பின்னர் மீடியாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். தற்போது திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியின் மூலம் ஜெயா டிவியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

திரையுலக வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவு கூறும் நிகழ்ச்சியான திரும்பிப்பார்க்கிறேன் நிகழ்ச்சி ஜெயா டிவியில் வாரந்தோறும் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த வாரம் நடிகை ரஞ்சனியின் நினைவலைகள் ஒளிபரப்பாகிறது.

சிங்கப்பூரில் பிறந்த ரஞ்சனியை `முதல் மரியாதை' படத்தில் செவுலி கதாபாத்திரம் மூலம் அறிமுகம் செய்தவர் பாரதிராஜா. அந்த படம் ரஞ்சனிக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. தொடர்ந்து கடலோரக் கவிதைகள் படத்திலும் நடித்தார். தமிழிலும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்த ரஞ்சனி, கேரளாவில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார்.

மீடியாக்களின் வெளிச்சத்தில் படாமல் ஒதுங்கியிருந்த ரஞ்சனி இப்போது திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் மீண்டும் முகம் காட்ட வந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் திரையுலக வாழ்வில் நடந்த மறக்க முடியாத பல நிகழ்வுகளை பட்டியலிடுகிறார். நிகழ்ச்சியில் அவர் நடித்த படங்களில் இருந்து காட்சிகளும் பாடல்களும் இடம் பெற உள்ளது.

 

Post a Comment