உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நான் ஒருபோதும் நடிகையாக மாட்டேன், சத்தியமாக நடிக்க வர மாட்டேன் என்று படு உறுதியாக கூறியுள்ளார் இளம் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பள்ளிகல்.
சென்னையைச் சேர்ந்த அழகுப் பெண்தான் தீபிகா. ஸ்குவாஷ் விளையாட்டில் ஜொலிக்கும் நட்சத்திரம். பூர்வீகம் கேரளா. இதனாலோ என்னவோ தீபிகாவைத் தேடி சினிமாக்காரர்கள் லைன் கட்டி நிற்க ஆரம்பித்துள்ளனராம். எப்படியாவது தீபிகாவை சினிமாவுக்குள் இழுத்து அவரையும் நடிக்க வைத்து விட வேண்டும் என்று ஏராளமான பேர் எப்படியெல்லாமோ முயல்கின்றனராம்.
இப்படித்தான் சானியா மிர்ஸா ஹாட்டாக விளையாடிக் கொண்டிருந்தபோது அவரையும் சினிமாவுக்குள் இழுத்து விட சகலரும் முயன்றனர். நம்ம சிம்பு கூட முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை. அனைவருக்கும் பெப்பே காட்டி விட்டார் சானியா.
இப்போது தீபிகாவை இழுக்க ஒரு கூட்டமே அலை மோதுகிறதாம். ஆனால் அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கூறி விட்டார் தீபிகா. உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நான் சினிமாவுக்கு ஒருபோதும் வர மாட்டேன், சத்தியமாக மாட்டேன் என்று தெளிவாக பேசுகிறார் தீபிகா.
சர்வதேச ஸ்குவாஷ் வீராங்கனைகள் வரிசையில் 14வது இடத்தில் இருக்கும் தீபிகா, இதுகுறித்துக் கூறுகையில், நான் விளையாடும்போது சத்தம் போட்டுக் கொண்டபடிதான் விளையாடுவேன். இது அனைவரையும் கவர்ந்து விட்டது. என் பால் மற்றவர்களுக்கு ஈர்ப்பு வர இந்த சத்தம்தான் காரணம். விளையாட்டின் மூலம்தான் நான் பேசப்படுகிறேன் என்று நினைக்கிறேன்.
என்னைத் தேடி சினிமா வாய்ப்புகள் நிறைய வந்தன, கோலிவுட்டிலிருந்துதான். ஆனால் நான் தான் முடியாது என்று கூறி விட்டேன். என்னால் நடிகையாக முடியாது. வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நிலையிலும் கூட நடிகையாக மாட்டேன் என்கிறார் தெளிவாக.
சரி பாய் பிரண்ட் உள்ளனரா என்று கேட்டால், எங்கங்க, எனக்கு விளையாடவே நேரம் போதவில்லை. பெரும்பாலான நேரத்தில் நான் போட்டிகளுக்கான டூரிலேயே இருக்கிறேன். பிறகெப்படி அதற்கெல்லாம் நேரம் இருக்க முடியும். ஒரு வேளை இப்படிப்பட்ட பிசியான வாழ்க்கை இல்லாமல் போயிருந்தால் நிச்சயம் பாய் பிரண்ட் இருந்திருக்கலாம் என்கிறார் வெளிப்படையாக.
இப்படியே உறுதியா இருங்க...
Post a Comment