இந்தி நடிகர் சைப் அலிகானுக்கு ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்மேன் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் பரவியதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. தங்கள் பட ரிலீசுக்கு முன்பாக இந்தி நடிகர், நடிகைகள் பரபரப்புக்காக ஏதேனும் தகவல் கூறுவார்கள். இதனால் தங்கள் படத்துக்கும் விளம்பரம் கிடைக்கும் என எதிர்பார்ப்பார்கள். சமீபத்தில் சைப் அலிகான் நடிப்பில் காக்டெய்ல் படம் ரிலீசானது. இப்படம் ரிலீசான 3 நாட்கள¢ கழித்து ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்மேனுடன் சேர்ந்து நடிப்பதாக சைப் அலிகான் கூறினார். இதை மீடியா பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டது. உடனே தான் ஜோக் அடித்ததாக கூறி அதை மறுத்தார் சைப். இந்நிலையில் தன்னுடன் நடிப்பதாக புரளி கிளப்பியதற்காக சைப் அலிகானுக்கு நடாலி போர்ட்மேன் நோட்டீஸ் அனுப்பிவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதை சைப் தரப்பு மறுத்துள்ளது. சைப் அலிகானுக்கு யாரும் நோட்டீஸ் அனுப்பவில்லை. அவர் காமெடியாக சொன்ன ஒரு விஷயத்தை பெரிதுபடுத்தியும் பிறகு அவருக்கு இப்போது பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறியும் மீடியாதான் சர்ச்சையை கிளப்பி வருகிறது' என சைப் அலிகானுக்கு நெருங்கியவர்கள் கூறினர். ஒவ்வொரு முறை பத்திரிகையாளர்களை சைப் சந்திக்கும்போதும் அவரது திருமணம் பற்றியே கேள்வி கேட்கிறார்கள். அதை பற்றியே செய்தி வெளியிடுகிறார்கள். அதிலிருந்து பத்திரிகையாளர்களை திசை திருப்பவே அவர் நடாலியுடன் நடிப்பதாக ஜோக் அடித்தார்' என சைப் அலிகானின் நண்பர் ஒருவர் கூறினார்.
Post a Comment