தனது பிறந்த நாளன்று வீட்டுக்கு வெளியே காத்திருந்த மீடியாவை ஏமாற்றிவிட்டு பழைய காதலன் சல்மான் வீட்டுக்கு பறந்தார் கேத்ரினா கைப். பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான கேத்ரினா கைப், ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளை தடபுடலுடன் கொண்டாடுவது வழக்கம். கடந்த 16ம் தேதி அவருக்கு 28வது வயது பிறந்தது. ஆனால் இந்த ஆண்டு பிறந்தநாளை கொண்டாடாமல் தவிர்த்தார். கடந்த 2 வருடத்துக்கு முன் அவர் நடத்திய பிறந்த நாள் விழாவில் சல்மான் கான், ஷாருக் கான் கலந்துகொண்டபோது இருவருக்கும் இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது. இதனால் பார்ட்டியே கலகலத்துப்போனது. அந்த பயம் கேத்ரினாவுக்கு இன்று வரை போகாததால் இம்முறை பார்ட்டி நடத்தவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் கேத்ரினாவின் பிறந்த நாள் நிகழ்வு தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக மும்பையில் உள்ள பத்திரிகை, டிவி சேனல் நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் மணிக்கணக்கில் அவர் வீட்டு முன் காத்திருந்தனர். யாரையும் அவர் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. நீண்ட நேரத்துக்கு பிறகு வீட்டிலிருந்து வெளிவந்த கேத்ரினா அங்கிருந்த போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்தார். பின்னர் தன்னை யாரும் பின்தொடரக்கூடாது என்று கண்டிஷன் போட்டுவிட்டு அங்கிருந்து காரில் பறந்தார். இதனால் மீடியாக்காரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தனது பழைய காதலன் சல்மான் வீட்டுக்கு சென்ற கேத்ரினா, அங்கு ரகசியமாக பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். சல்மான், கேத்ரினா இணைந்து ஏக் தா டைகர் படத்தில் நடித்துள்ளனர். இப்பட ஷூட்டிங்கில் இருவரும் மீண்டும் நெருக்கமாக பழக ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.
Post a Comment