கிசு கிசு - கைவிரிச்ச ஹீரோயின்

|

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

பாக்ய இயக்கம் தலமைல மல்லுவுட் பெஸ்ட் ஆக்டர் செலக்ஷன் நடந்துச்சாம்... நடந்துச்சாம்... அறிவிப்பு வந்த ரெண்டு நாளைக்கப்புறம் சிலர் எதிர்ப்பு குரல் எழுப்புறாங்களாம்... எழுப்புறாங்களாம்... பெஸ்ட் ஆக்டர், இயக்கம், படம்னு எதையும் சரியா செலக்ட் பண்ணல. இதைவிட பெஸ்ட் படம், நடிகர், இயக்கமெல்லாம் இருக்காங்கனு அப்ஜெக்ட் பண்றாங்களாம். அதுவும் மூத்த திலக ஆக்டரு இடையில லால் நடிகர் மேல உர்ரா இருந்தாரு. இப்போ பெஸ்ட் ஆக்டர் அவார்டு ஏன் லாலுக்கு கொடுக்கலைனு நேரடியாவே திலக நடிகரு கேக்குறாராம்... கேக்குறாராம்...

தலய இயக்கிய 28 கிரிக்கெட் இயக்கத்துக்கு இப்ப பஞ்ச் நடிகரை இயக்க ஆசை வந்திருக்காம்... வந்திருக்காம்... காட்டன் வீர ஹீரோ படத்த இயக்குறதுல பிஸியா இருந்தாலும் தன்னோட அடுத்த படத்துக்கு பஞ்ச் ஹீரோவை பிக்ஸ் பண்ற முயற்சில இருக்காராம். இந்த விஷயத்த தூதர் மூலமா நடிகர் காதுல போட்ட இயக்கம், இப்போவே ஸ்கிரிப்ட் தயாரிப்புல கவனம் செலுத்துறாராம். ஆனா, பஞ்ச் நடிகரோ இன்னமும் கிரீன் சிக்னல் கொடுக்கலையாம்... கொடுக்கலையாம¢...

சாலம இயக்கம் எலிபென்ட் கதையை இயக்குறாராம்... இயக்குறாராம்... இது லட்சுமியான ஹீரோயின் அறிமுகமாகுறாரு. சின்ன பசங்கள வச்சி படம் எடுத்த இயக்கம் தன் படத்துக்கு நடிகைகிட்ட டேட் கேட்டாராம்... கேட்டாராம்... இதோ அதோன்னு இழுத்தடிச்சி கடைசில கையை விரிச்சிட்டாராம். இதுக்கு காரணம் சாலம இயக்கம்தானாம். 'பட ரிலீஸுக்கு பிறகு பெரிய ஸ்டார் படத்துல நடிக்கக்கூட சான்ஸ் வரும். இப்பவே சின்ன படங்கள்ல நடிச்சா அந்த சான்ஸ மிஸ் பண்ண வேண்டி இருக்கும்Õனு காதுல ஓதுனாராம். இதை கேட்டு பசங்க இயக்கத்துக்கு நோ சொல்லிட்டாராம்... நடிகை நோ சொல்லிட்டாராம்... அந்த சின்ன படத்துல நடிச்சா, தன்னோட பட பிசினஸ் பாதிக்கலாம்கிறதால இயக்கம் இப்படி செஞ்சாராம்... செஞ்சாராம்...


 

Post a Comment