துபாய் அருகே உள்ள ராஸல் கைமாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் வைகைப் புயல் வடிவேலு.
துபாயிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராஸல் கைமா நகர்.
இங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரபல நகைச்சுவை நடிகர் வைகைப் புயல் வடிவேலு கடந்த வெள்ளிக்கிழமை மாலை ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
தன்னை நகைச்சுவை நடிகனாக்கியது எது என்பதற்கு வடிவேலு சொன்ன பதில் இயல்பாக இருந்தது. தனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நடந்த சம்பவங்களை நகைச்சுவையுடன் பார்த்த விதம்தான் தன்னை நகைச்சுவை நடிகராக மாற்றியதாகக் கூறினார் வடிவேலு.
வாழ்வில் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், எவரையும் ஏய்த்துப் பிழைப்பது நல்ல வாழ்க்கையல்ல என்ற தத்துவத்தை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க கேட்டுக் கொண்டார்.
மதுரையில் உங்களுக்குப் பிடித்த இடம் எது என்று கேட்டபோது, மீனாட்சி அம்மன் கோவில் என்றார் வடிவேலு.
தனக்குக் கொடுக்கப்பட்ட ஓய்வு அடுத்த கட்டத்திற்கு முழுமையாகத் தயாராவதற்குத்தான் என்றும், அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாம் என்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து யுடிஎஸ் சினர்ஜி குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வினை குணா மற்றும் கங்கா தொகுத்து வழங்கினர்.
Post a Comment