புதுமுகங்கள் எஸ்.சதீஷ், தீப்தி நம்பியார் நடிக்கும் படம் 'வெள்ளைக் காகிதம்' ஜி.வி.சந்தர் இயக்கம். சதீஷ்வர்ஷன் இசை. இ.ராஜா, ஏ.கே.எஸ். ஆகிய இருவரின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பாடல் சிடி வெளியீட்டு விழா நேற்று நடந்தது. பின்னணி பாடகி எஸ்.ஜானகி கலந்துகொண்டு பாடல் சிடியை வெளியிட்டு பேசினார். அவர் கூறும்போது,''அந்த காலம் முதல் இந்த காலம் வரை இசையின் ரசனை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு நல்ல பாட்டு என்பது குறிப்பிட்ட பகுதியில் மட்டு மில்லாமல் காய்கறி கடையிலும் அது ஒலிக்க வேண்டும். பெரிய இடங்களிலும் ஒலிக்க வேண்டும். கே.வி.மகாதேவன், சுப்பையா நாயுடு, எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட இசை மேதைகள் வழங்கிய பாடல்கள் என்றைக்கும் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்த காலத்து மெலடியையும் இந்த காலத்து நவீன இசையையும் கலந்து இப்படத்தின் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நானும் பாடி இருக்கிறேன்'' என்றார். விழாவில் இயக்குனர்கள் பாண்டி ராஜ், சுசீந்திரன், நடிகர் விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Post a Comment