அம்மா கேரக்ட்ரா? அலறும் தேவதர்ஷினி

|

Devadarshini Is Possessive Mother

அத்திப்பூக்கள் தொடர் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. பாசமான அம்மாவாக நடித்துவரும் தேவதர்சினியை நிறைய இயக்குநர்கள் சினிமாவில் ஹீரோவிற்கு அம்மாவாக நடிக்க அழைப்பு விடுக்கிறார்களாம்.

சீரியலில் சீரியஸாக நடித்தாலும் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார் தேவதர்ஷினி. காஞ்சனா படத்தில் காமெடியான அண்ணியாக வந்து அனைவரையும் கலகலப்பூட்டியவர் இப்போது சன் தொலைக்காட்சியில் சண்டே கலாட்டா நிகழ்ச்சியின் மூலம் காமெடி நிகழ்ச்சியில் நடித்து வருகிறார்.

சினிமா, சீரியல் இரண்டுமே இரண்டு கண்கள்தான் என்று கூறும் தேவதர்ஷினி காமெடி நடிகை என்ற ஒரு இமேஜ் மட்டுமே தனக்கு வேண்டாம் என்று கூறுகிறார். அதனால்தான் காஞ்சனாவிற்கு பிறகு அதே மாதிரியாக வந்த பல வாய்ப்புகளை மறுத்துவிட்டாராம்.

சினிமாவில் ஹீரோவிற்கு அம்மாவாக நடிக்க வரும் வாய்ப்புகளுக்கும் நோ சொல்லிவிடுகிறாராம். இப்போது நடித்து வரும் அக்கா, அண்ணி கதாபாத்திரங்கள் வாய்ப்பு பறிபோய்விடும், தவிர சீரியல்களில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்பதனால்தான் அம்மா ரோல்களில் நடிக்க மறுத்துவிடுவதாகவும் காரணம் கூறியுள்ளார்.

அத்திப்பூக்கள் தொடரில் பாசமான அம்மாவாக நடித்து வரும் தேவதர்ஷினி நிஜவாழ்க்கையில் பொஸசிவ் அம்மாவாம். கணவர் குழந்தைகளுக்காக அதிக நேரம் செலவிடவேண்டும் என்பதற்காகவே நிறைய வாய்ப்புகளை ஒத்துக்கொள்வதில்லையாம்.

 

Post a Comment