ராஜேஷ் கன்னா உடலுக்கு அஞ்சலி

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
இந்தி திரையுலகில் சூப்பர்ஸ்டாராக விளங் கிய ராஜேஷ் கன்னா நேற்று காலமானார். அவருக்கு வயது 69. அவரது உடலுக்கு இந்தி திரையுலகமே திரண்டு அஞ்சலி செலுத்தியது. அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. பாலிவுட்டில் முதன்முதலாக சூப்பர் ஸ்டார் என்ற பட¢டப்பெயருக்கு சொந்தக்காரர் ராஜேஷ் கன்னா (69). கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், நடிகைகள் ஹேமமாலினி, ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். ராஜேஷ் கன்னாவின் இறுதி சடங்கு இன்று காலை நடந்தது. மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது 'ஆசீர்வாத்' இல்லத்தில் இருந்து காலை 10 மணிக்கு உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள், உறவினர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 11 மணியளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து 8 வெள்ளிவிழா நெஞ்சை விட்டு நீங்காத ஆராதனா

மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா, சூப்பர் ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் என புகழ் அஞ்சலி செலுத்தி வருகிறது திரையுலகம். ஆராதனா படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக அவர் விளங்கினார். இந்தி திரையுலகில் காதல் மன்னனாக திகழ்ந்த ராஜேஷ் கன்னாவுக்கு பெண் ரசிகைகள் அதிகம். அவருக்கு ரத¢தத்தில் கையெழுத்திட்டு கடிதங்கள் எழுதுவார்கள். காரில் செல்லும்போது அவரை பார்த்துவிட்டால் கார் கண்ணாடிக்கு முத்தமிடுவார்கள். ரசிகைகள் கூட்டத்திலிருந்து கார் மீண்டு வந்தபிறகு பார்த்தால் கண்ணாடியில பல இடங்களில் ரசிகைகள் கொடுத்த முத்தங்களின் அடையாளமாக ஏராளமான லிப்ஸ்டிக் சாயம் இருக்கும். இதுவரை 163 படங்களில் நடித்திருக்கிறார் ராஜேஷ் கன்னா. இதில் 106 படங்கள் அவர் தனிபட்டமுறையில் ஹீரோவாக நடித்தவை. 22 படங்கள் டபுள் ஹீரோ சப்ஜெட் படங்கள். 1969 முதல் 1972வரை தொடர்ச்சியாக அவர் நடித்த 15 படங்கள் சூப்பர் ஹிட்டாகி வசூலை அள்ளிக்குவித்தது. இதில் தொடர்ந்து 8 படங்கள் வெள்ளி விழா கொண்டாடியவை. இதனால், சூப்பர் ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா என அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரையுலகினர் அவரை பற்றி கூறியுள்ளனர். இவர் நடித்த ஹாத்தி மேரா சாத்திÕ , ஆராதனா படங்கள் தமிழில் ரீமேக் ஆகின. இவற்றில் முறையே எம்ஜிஆர் (நல்ல நேரம்), சிவாஜி (சிவகாமியின் செல்வன்) நடித்தது குறிப்பிடத்தக்கது. இவரது படங்களில் இடம்பெற்ற 'மேரே சப்னோகி ராணி, ரூப் தேரா மஸ்தானா, சல் சல் சல் மேரே சாத்தி உள்ளிட்ட பல பாடல்கள் பிரபலமானவை. ஆராதனா படம், சென்னையில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இந்த படம¢ மூலம் தமிழகத்திலும் அவருக்கு ரச¤கர்கள் பெருகினர். 1991ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டுவரை இவர் எம்.பி.யாக இருந்தார். பாபி படத்தில் நடித்த டிம்பிள் கபாடியாவை இவர் 1973ம் ஆண்டு மணந்தார். மகள்கள் டுவிங்கிள் கன்னா, ரிங்கிள் கன்னா உள்ளனர்.


 

Post a Comment