அமலா பாலின் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக என்று டைட்டில் கார்டு போடாத குறையாக, படு கவர்ச்சிகரமான ஆட்டத்தை முதல் முறையாக பப்ளிக்காக அரங்கேற்றி அசத்தியுள்ளார், சமீபத்தில் துபாயில் நடைபெற்ற சிமா 2012 திரைப்பட விருதுகள் விழாவின்போது.
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த இந்த மைனா நடிகை இதுவரை பெரிய அளவில் எங்குமே கவர்ச்சி காட்டியதில்லை. சினிமாவில் கூட 'பொத்துனாப்புல'தான் வந்து போயிருக்கிறார். திரைப்பட விழாக்களுக்குக் கூட பெரிய அளவில் கவர்ச்சிகரமாக அவர் வருவதில்லை. லேசுபாசான கவர்ச்சியைத்தான் கடைப்பிடித்து வருகிறார்.
இந்த நிலையில் முதல் முறையாக பப்ளிக்காக ஒரு விழாவில் படு கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டு அடடா, நம்ம அமலா பாலா இது என்று அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார் இந்த 'தெய்வத்திருமகள்'.
துபாயில் நடந்த சிமா 2012 திரைப்பட விழாவில்தான் இப்படி ஒரு கெட்ட ஆட்டம் போட்டுள்ளார் அமலா பால். குத்துப் பாட்டுக்கு கோலாகலமாக ஆடிய அமலா பால், முன்னழகை முக்கால்வாசி காட்டும் விதத்திலான உடையுடன் ஆடியதைப் பார்த்து ஆடியன்ஸெல்லாம் உற்சாகத்தின் உச்சிக்கே போய் விட்டார்களாம்.
அவர் மட்டுமா ஹன்சிகா மோத்வானியும் கூட பிரமிக்க வைக்கும் வகையில் பிரமாதமான கவர்ச்சி ஆட்டம் போட்டார்.இவர்களின் ஆட்டத்திற்கு என்ன காரணமாக கூறப்படுகிறது என்றால், தெலுங்குத் திரையுலகில் வாய்ப்பைப் பிடிக்கும் நோக்கத்தில்தான் இப்படி கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டு தெலுங்குத் திரையுலகினரை கவர்ந்துள்ளதாக கூறுகிறார்கள். தெலுங்கில் கவர்ச்சிக்கு தனி 'கட்டிங்' என்பதால் யாருடைய கவர்ச்சி அசரடிக்கிறதோ அவர்களுக்கே 'டப்பு' ஜாஸ்தி என்பதாலும் போட்டி போட்டு பொளந்து கட்டியுள்ளனராம்.
இவர்கள் போக பிரியா மணி, ஸ்ருதி ஹாசன், சார்மி, பார்வதி ஓமனக்குட்டன் என பலரும் கலக்கலாக ஆடினர்.ஆனால் அமலா பால் மற்றும் ஹன்சிகா மீதுதான் அத்தனை பேரின் கண்களும் இருந்ததாம்.
உங்க கண் யார் மீதோ...?
Post a Comment