அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தத் தயாராகும் இசைஞானி!

|

Ilayaraaja Perform Live Concert Us

முதல் முறையாக அமெரிக்காவில் இசைக் கச்சேரி நடத்தப் போகிறார் இசைஞானி இளையராஜா.

கலிபோர்னிய நகரங்கள் மற்றும் நியூயார்க்கில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடக்கவிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளையராஜா வெளிநாடுகளில் இரண்டு நிகழ்ச்சிகள்தான் நடத்தியிருக்கிறார். ஒன்று இத்தாலியில், மற்றொன்று துபாயில்.

ஆனால் உலகின் பல நாடுகளிலிருந்தும் இசை ஆர்வலர்கள் அவரை கச்சே செய்து தரச் சொல்லி கேட்டு வருகிறார்கள். அவரோ அரிதாகவே அத்தகைய நிகழ்ச்சிகளை ஒப்புக் கொள்கிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் முதல் முறையாக இசை நிகழ்ச்சி நடத்த ஒப்புக் கொண்டுள்ளார் ராஜா.

இந்த கச்சேரியில் ராஜாவின் மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரிணி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். முன்னணி பாடகர்கள், பாடகிகளுடன் இளையராஜாவின் குழு அமெரிக்கா புறப்படுகிறது, நவம்பர் இறுதியில்!

டிசம்பர் முதல் வாரத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடக்கும் எனத் தெரிகிறது.

 

Post a Comment