எம் டிவியில் ஸ்ருதி ஹாசன் : இசைநிகழ்ச்சி மூலம் அறிமுகம்

|

Shruti Hassan Make Tv Debut Music S

உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசை அமைத்த ஸ்ருதிஹாசன் தற்போது எம். டிவியில் புதுமையான இசை நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகிறார்.

இந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக வலம் வரும் ஸ்ருதிஹாசன் அடிப்படையில் இசைத்துறையை சார்ந்தவர். இசையின் மீது கொண்ட ஆர்வத்தினால்தான் தனது தந்தையும் நடிகருமான கமல்ஹாசன் திரைப்படமான உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு இசை அமைத்தார். பல திரைப்படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார்.

தற்போது முதல்முறையாக எம்.டிவி யில் அறிமுகமாகிறார். `எம்டிவி ரஷ்' என்ற அந்த புதுமையான நிகழ்ச்சி, எம்.டி.வியில் ஒளிபரப்பாகிறது. பிஜோய் நம்பியாரால் இயக்கப்படும் `எம்டிவி ரஷ்', அட்டகாசமான 13 பகுதிகள் கொண்டதாம். இசை மீதான அவருக்கு உள்ள காதலினை இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தும் என்கிறார்கள். இதில் ஓர் அத்தியாயத்தில் ஸ்ருதிஹாசன் தனது சொந்த இசைக்கோர்வைகளை அரங்கேற்றுவாராம்.

எம்டிவி ரஷ் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தியிருக்கு. பிஜோய் என்னை அணுகி இந்த கான்செப்டை சொன்னதுமே எனக்கு பிடிச்சுப் போச்சு. இதில் நான் உருவாக்கிய இசைக்கோர்வையை நானே இசைப்பதை ரசிகர்கள் கண்டு, கேட்டு மகிழலாம். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளை நான் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் என்று உற்சாகத்தோடு தெரிவித்தார் ஸ்ருதி.

 

Post a Comment