ஆமீர் கான் படத்தில் ரஜினிகாந்த் ஆடவில்லை: இயக்குனர் ரீமா

|

No Item Number Rajinikanth Talaash

பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் தலாஷ் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பாடலுக்கு ஆடவில்லை என்று அப்படத்தின் இயக்குனர் ரீமா காக்டி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் தலாஷ் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பாடலுக்கு ஆடவிருக்கிறார் என்றும், அதற்காக அவருக்கு ரூ.15 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது என்றும் ஒரே பேச்சாகக் கிடந்தது. இந்நிலையில் ஆமீர் கான் படத்தில் ரஜினிகாந்த் ஒரு பாட்டுக்கு ஆடவில்லை என்று அப்படத்தின் இயக்குனர் ரீமா காக்டி தெரிவி்த்துள்ளார்.

ரஜினிகாந்த் தன்னுடைய கோச்சடையான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணியில் பிசியாக இருக்கிறார். அவர் தனது மகள் சௌந்தர்யாவுக்கு உதவியாக எடிட்டிங், மிக்ஸிங் ஆகிய வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அந்த படம் சிறப்பாக வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று ரஜினிக்கு தெரிந்த வட்டாரங்கள் தெரிவி்த்தன.

பாலிவுட் நடிகர்கள் ரஜினிகாந்தை தங்கள் படங்களில் ஒரு காட்சியிலாவது நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஏற்கனவே ஷாருக்கான் தனது ரா ஒன் படத்தில் ரஜினியை ஒரு காட்சியில் தோன்ற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment