நானும் இளையராஜாவும் பார்ட்டிக்கு போனவங்கதான்.. பார்ட்டி கொடுத்தவங்கதான்!- கங்கை அமரன்

|

Ilayaraaja Me Attending Liquor Partties At Once

"இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி பெற்றால் போதும். உடனே அந்த படம் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். 'பார்ட்டி' கொடுக்கும் கலாசாரம் இப்போது அதிகமாகி வருகிறது.

என் மகன்களும் அடிக்கடி 'பார்ட்டி'களுக்கு போகிறார்கள். திரும்பி வரும்போது, பிரச்சினையையும் இழுத்து வந்து விடுகிறார்கள்.

நானும், எங்க அண்ணன் இளையராஜாவும் ஒரு காலத்தில் 'பார்ட்டி'க்கு போனவர்கள்தான். 'பார்ட்டி' கொடுத்தவர்கள்தான். ஒரு 'பார்ட்டி'யில் பிரச்சினை ஆகிவிட்டது. அதில் இருந்து 'பார்ட்டி'க்கு போவதையும் நிறுத்தி விட்டோம். 'பார்ட்டி' கொடுப்பதையும் நிறுத்தி விட்டோம்.

கண்ணதாசனை இழிவுபடுத்துவதா...

இப்போதைய பாடல் ஆசிரியர்கள் கவிஞர் கண்ணதாசனை இழிவுபடுத்துவது போல், "கண்ணதாசன் காரைக்குடி...பேரைச் சொல்லி ஊற்றிக் குடி'' என்று பாட்டு எழுதுகிறார்கள்.

கவிஞர் கண்ணதாசனுக்கும் குடிப்பழக்கம் இருந்தது. இருப்பினும் அவர், ``காலங்களில் அவள் வசந்தம்...கலைகளிலே அவள் ஓவியம்...மாதங்களில் அவள் மார்கழி...மலர்களிலே அவள் மல்லிகை...'' என்று அழகான தமிழில் பாடல் எழுதவில்லையா? அதுபோல் நல்ல தமிழில் பாடல் எழுதுங்கள்.''

-சனிக்கிழமை நடந்த, உதயன் இசையமைத்த மன்னாரு இசை வெளியீட்டு விழாவில் கங்கை அமரன் சொன்னது...

 

Post a Comment