எல்லா கேரக்டர்களிலும் நடிக்க ஆசை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆர்.கே ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாலமுருகன், மணி தயாரிக்கும் படம் 'மச்சான்'. கருணாஸ் ஹீரோ. ஷெரில் பிரிண்டோ ஹீரோயின். மற்றும் விவேக், ரமேஷ் அரவிந்த், கோவை சரளா, மயில்சாமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஷக்தி சிதம்பரம் இயக்கி, நடிகராக அறிமுகமாகிறார். படம் பற்றி நிருபர்களிடம் கருணாஸ் கூறியதாவது: நட்பை மையப்படுத்திய கதை. ஆல் இன் ஆல் அழகுராஜாவாக நானும், லொள்ளு பாண்டியாக ஷக்தி சிதம்பரமும் நடிக்கிறோம். என் மனைவியாக ஷெரில் பிரிண்டோ. விவேக்கிடம், 'இந்தப் படத்தின் முக்கிய கேரக்டரில் நீங்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும்' என்றேன். ஒப்புக்கொண்டார். இதற்கு அவர் பெருந்தன்மைதான் காரணம்.

'திண்டுக்கல் சாரதி', 'அம்பாசமுத்திரம் அம்பானி' படங்களில் ஹீரோவாக நடித்தேன். இப்போது 'ரகளபுரம்', 'சந்தமாமா' படங்களை தொடர்ந்து இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். மேலும், ஐந்து படங்களில் ஹீரோவாக நடிக்க உள்ளேன். என்றாலும், காமெடி வேடத்தில் நடிக்க வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு சீன் வந்தாலும், ரசிகர்களை எப்படி சிரிக்க வைப்பது என்றுதான் யோசிப்பேன். இதற்கு நான் ஒரு காட்சியில் மட்டுமே நடித்த 'யாரடி நீ மோகினி' உதாரணம். என் காமெடி அதில் பேசப்பட்டது. எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடித்து சாதிக்க ஆசைப்படுகிறேன்.


 

Post a Comment