கோலிவுட்டில் இன்றைய சூடான பேச்சு... ராஜமவுலி - அஜீத் டெலிபோன் பேச்சு குறித்துதான்.
ராஜமவுலியை அநேகமாக தமிழுக்கு அழைத்து வந்துவிடுவார் போலிருக்கிறது தல, என்கிறார்கள் இருவரும் பேசிக் கொண்டதை அருகிலிருந்து கேட்டவர்கள்.
நானி, சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூலில் கலக்கிக் கொண்டிருக்கும் படம் நான் ஈ. இந்தப் படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தையும் அதன் வில்லன் சுதீப்பையும் பாராட்டித் தள்ளிவிட்டார்.
தமிழ்த் திரையுலகமே இந்தப் படத்துக்கு பாராட்டு மழை பொழிந்துவிட்டது. தெலுங்கில் இதுவரை வந்த படங்களின் சாதனையை ஈகா முறியடித்துவிட்டது.
லேட்டஸ்டாக நான் ஈ படம் பார்த்தவர் அஜீத். படம் பார்த்து முடித்ததும், ராஜமவுலியை போனில் தொடர்பு கொண்டு புகழ்ந்து தள்ளிவிட்டாராம். கூடவே, ஒரு நல்ல சரித்திர த்ரில்லர் நடிக்கும் தனது ஆசையையும் ராஜமவுலிக்கு தெரிவித்துள்ளார் அஜீத்.
தனக்கேற்ற மாதிரி ஒரு கதையைத் தயார் செய்யத் தகுதியானவர் ராஜமவுலி என்பது அஜீத்தின் கருத்து. அதேபோல, அஜீத்தின் நடிப்புத் திறமையையும் யதார்த்தத்தையும் புகழ்ந்த ராஜமவுலி, ஒரு பர்பெக்டான படம் அமைந்தால் அஜீத்தின் ரேஞ்சே வேறு என்றாராம்.
ராஜமவுலி நேரடி தமிழ்படம் இயக்குவதில் ஆர்வமாக உள்ளாராம். தலயும் 'ஷோ மேனும்' கை கோர்ப்பதற்கு எக்கச்சக்க சாத்தியம் உள்ளதாக அஜீத் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.
Post a Comment