சஞ்சய் தத்துடன் ஜோடி சேர மறுத்த த்ரிஷா!

|

Trisha Says No Saamy Remake   

சாமி இந்தி ரீமேக்கில் சஞ்சய் தத்துக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் நடிகை த்ரிஷா.

விக்ரம், திரிஷா ஜோடியாக நடித்து வெற்றிகரமாக ஓடிய சாமி படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் கே.எஸ். ரவிக்குமார்.

இதில் விக்ரம் கேரக்டரில் சஞ்சய்தத் நடிக்கிறார். கதாநாயகியாக மீண்டும் திரிஷாவையே நடிக்க வைக்க ரவிக்குமார் விரும்பினார். இதற்காக திரிஷாவை அணுகி கால்ஷீட் கேட்டார். ஆனால் சஞ்சய்தத்துடன் நடிக்க அவர் மறுத்து விட்டார்.

இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், "சாமி இந்தி ரீமேக்கில் என்னை நடிக்க கேட்டது உண்மைதான். ஆனால் நான்தான் மறுத்துவிட்டேன்.

காரணம் ஏற்கெனவே 3 தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். வேறு படங்களில் நடிப்பதற்கு என்னிடம் கால்ஷீட் இல்லை. இந்தி சாமி படத்தில் நடிப்பதற்காக ஆகஸ்டு மாதம் வரை என்னிடம் தேதி ஒதுக்கித் தருமாறு கேட்டனர். அதனால்தான் வேண்டாம் என்று கூறிவிட்டேன்," என்றார்.

திரிஷா மறுத்ததால் அவர் கேரக்டரில் நடிக்க பிராச்சி தேசாயை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 

Post a Comment