சென்னை, : கவுதம் வாசுதேவ் மேனன் வழங்கும் போட்டோன் கதாஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம், 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்'. இது தெலுங்கில் 'கொரியர் பாய் கல்யாண்' பெயரில் உருவாகிறது. பிரபுதேவாவிடம் இணை இயக்குனராக இருந்த பிரேம் சாய் இயக்குகிறார். தமிழில் ஜெய், சந்தானம், வி.டி.வி கணேஷ், தெலுங்கில் நிதின், ராஜேஷ் நடிக்கின்றனர். ஹீரோயின் தேர்வு நடக்கிறது. பாடகர் கார்த்திக் இசை. ஐதராபாத்தில் ஷூட்டிங் நடக்கிறது. காமெடி, காதல், ஆக்ஷன் என்ற கலவையாக படம் உருவாகிறது.
Post a Comment