ஒரு காலத்தில் காதலர்களாக வலம் வந்த பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை கத்ரீனா கைபும் சேர்ந்து தற்போது ஏக் தா டைகர் என்ற இந்தி படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது சல்மான் கான் கத்ரீனா கைபை அடித்துவிட்டதாக சினிபிலிட்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.
இது குறித்து அந்த பத்திரிக்கையில் வெளியான செய்தி,
கத்ரீனா கைப் ரெடியாகி வருவதற்காக சல்மான் கான் செட்டில் காத்திருந்தார். வேனிட்டி வேனில் இருந்து வெளியே வந்த கத்ரீனா உடம்போடு ஒட்டி கிளீவேஜ் தெரியும் அளவுக்கு, உடம்பின் பெரும்பாலான பகுதிகள் தெரியும் அளவுக்கு அரை குறையாக ஆடை அணிந்து வந்தார். இதைப் பார்த்த சல்மான் கான் கடுப்பாகி என்ன டிரெஸ் போட்டிருக்க என்று கேட்டுள்ளார். அதற்கு கத்ரீனா நான் என்ன செய்ய இயக்குனர் சொன்ன ஆடையைத் தான் அணிந்துள்ளேன் என்று கூலாக சொன்னார். உடனே சல்மான் இயக்குனர் எங்கே, நான் அவரைப் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி கெட்டவார்த்தைகளால் திட்டி கத்ரீனாவை அடித்தார் என்று அதில் செய்தி வெளியானது.
ஆனால் இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று கத்ரீனாவின் தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
இந்த செய்தி முற்றிலும் தவறானது. அவர்கள் பிரிந்துவிட்டாலும் எந்தவித பகையும் இல்லாததால் தான் ஒன்றாகச் சேர்ந்து நடிக்கின்றனர். டப்ளின் மற்றும் இஸ்தான்புல்லில் நடந்த படப்பிடிப்புகளில் அவர்கள் நன்றாகப் பழகியுள்ளனர். கத்ரீனா மீது சல்மானுக்கு அக்கறை அதிகம். மக்கள் பல்வேறு கதைகளை உருவாக்குவார்கள். அவர்கள் இருவரும் விருது வழங்கும் விழாவுக்கு வராததால் வதந்திகள் பரவுகிறது.
கத்ரீனா கைப் வசம் பல படங்கள் உள்ளன. ஊடகங்கள் பரப்பும் வதந்தியையெல்லாம் கண்டுகொள்ள அவருக்கு நேரமில்லை. கால்ஷீட் பிரச்சனையால் கரண் ஜோஹாரின் தோஸ்தானா 2ம் பாகத்தில் நடிக்க வந்த வாய்ப்பை அவர் தட்டிக்கழித்தார் என்றார்.
Post a Comment