சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி உதிரிப்பூக்கள் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கதையின் நாயகிக்கு திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்க அது நடக்குமா என்பதுதான் வரும் வார சஸ்பென்ஸ்.
சக்தியின் வளர்ப்பு அப்பா சிவநேசன் ஏற்பாடு செய்த திருமணம் சொந்தக்காரர்களின் சதியினால் நின்றுவிடுகிறது. சொந்த அப்பாவிடம் சென்றபின்னர் மீண்டும் அதே மாப்பிள்ளையுடன் ஷக்தி திருமணம் நடக்க ஏற்பாடாகிறது. சொந்த அப்பா தட்சிணாமூர்த்தி திருமணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டே மறைமுகமாக அந்த திருமணத்தை மணமேடையில் தடுத்து நிறுத்தவும் ஏற்பாடு செய்கிறார். தனது மகளை அக்காள் மகன் இளங்கோவிற்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்து சதி செய்கிறார் தட்சிணாமூர்த்தி.
அவரது சாகச நாடகம் அரங்கேறும் தினம் வருகிறது. மணமேடையில் ஷக்தி விரும்பிய மணமகனுடன் திருமணம் நடந்ததா? அல்லது அவளது சொந்த அப்பா தட்சிணாமூர்த்தியின் திட்டப்படி இளங்கோ அவளுக்கு மாலையிட்டானா? பரபரப்பான திருப்பங்களுடன் தொடர்கிறது, தொடர்.
ஷக்தியாக மானசா நடிக்கிறார். வளர்ப்பு அப்பா சிவநேசனாக சேத்தனும் , சொந்த அப்பாவாக எல். ராஜாவும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி, ஸ்ரீலேகா, ரூபஸ்ரீ ஆகியோரும் நடிக்கிறார்கள். `ஹோம் மீடியா மேக்கர்ஸ்' சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இந்த தொடரை விக்ரமாதித்தன் இயக்கியுள்ளார்.
Post a Comment