மும்பை : மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னாவின் உடல் இன்று காலை 11 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது. அவரது சிதைக்கு அவரது பேரன் ஆரவ் தீ மூட்டினார்.
மும்பையில் உள்ள ஆசீர்வாத் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ராஜேஷ் கன்னாவின் உடல், காலை 10.15 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து மைதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
வழி நெடுகிலும் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். வெள்ளை நிற வாகனத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு முக்கிய சாலைகளில் திரண்டிருந்த ரசிகர்களுக்க மத்தியில் மெதுவாக ஊர்ந்து சென்றது. மும்பையே திணறும் அளவுக்கு லட்சக்கணக்கில் மக்களும் ரசிகர்களும் இந்த இறுதி ஊர்வலத்துக்கு திரண்டு வந்தனர்.
ராஜேஷ் கன்னா மனைவி டிம்பிள் கபாடியா, மகள்கள் ரிங்கி கன்னா, ட்விங்கிள் கன்னா, மருமகன்கள் அக்ஷய் குமார், சமீர் சரண் ஆகியோர் அந்த வண்டியில் அமர்ந்து சென்றனர். இறுதி ஊர்வலம் இன்று காலை 11 மணி அளவில் விலே பார்லேவில் உள்ள மைதானத்தை அடைந்தது. அங்கு அவரது உடலுக்கு ட்விங்கிள்- அக்ஷய் குமாரின் மகன் ஆரவ் தீ மூட்டினார்.
Post a Comment