மும்பை: நடிகர் சல்மான்கானின் தம்பியும் நடிகருமான சோகைல்கானுக்கு சொந்தமான கார் மோதி 70 வயது பெண் பலியானார்.
சோஹைல்கானின் ஆடம்பர லேண்ட் க்ரூய்ஸர் நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் மும்பை புறநகர் பந்தரா பகுதியில் சென்று கொண்டிருந்தது.
வெகு வேகமாக சென்ற அந்த கார், எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் சென்ற 70 வயது மூதாட்டி மீது மோதியது. இதில் அந்தப்பெண் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கிருந்த கார் டிரைவர் தனஞ்செய் பிம்பிள் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அவர் குடித்துவிட்டு வண்டியோட்டினாரா? என்பதை கண்டுபிடிப்பதற்காக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இதற்கிடையே விபத்து நடந்தபோது நடிகர் சோகைல்கானும் காரில் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் அதை போலீசார் மறுத்துவிட்டனர்!
இந்தக் காரில் சோஹைல்கான் சென்றதாகக் கூறப்பட்டாலும், காருக்கு உரிமையாளர் சோஹைலின் அண்ணன் நடிகர் அர்பாஸ் கான் என்பதால், இருவரிடமும் விசாரணை நடக்கும் எனத் தெரிகிறது.
Post a Comment