மதுரை: மதுரை மாநகரில் உள்ள திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூலித்த திரையங்குகளுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஷ்ராவுக்கு தொடர்ந்து புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது. இதையடுத்து மதுரை மாநகரில் புகார்களுக்கு ஆளான திரையரங்குகளை கண்காணிக்குமாறு துணை கலெக்டருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் துணை கலெக்டர் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுக்கள் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தியேட்டர் மற்றும் ஞான ஒளிவுபுரம், வண்டியூர், வக்கீல் புது தெரு, வில்லாபுரம், புதுநத்தம் ரோடு, திருநகர் உள்பட 8 தியேட்டர்களில் திடீர் சோதனை மேற்கொண்டன.
இந்த திரையரங்குகளில் அரசால் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து 4 திரையரங்குகளுக்கு தலா ரூ.6,000ம், 2 திரையரங்குகளுக்கு தலா ரூ.2 ,000 அபராதம் விதித்து கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார்.
Post a Comment