விஜய் படத்துக்கு தடை நீட்டிப்பு... கவலையில் கலைப்புலி!

|

Producers Worry On Third Extension

சென்னை: விஜய் படம் துப்பாக்கியின் தலைப்புக்கு தடை மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டிருப்பது, அதன் தயாரிப்பாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளத்துப்பாக்கி படக்குழுவினர் தொடர்ந்த வழக்கில், நடிகர் விஜய் நடிக்கும் `துப்பாக்கி' என்ற படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை, மேலும் ஒருவாரத்துக்கு நீட்டித்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தடையை நீக்கக்கோரி, சிட்டி சிவில் கோர்ட்டில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பதில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி திருமகள் முன்பு கடந்த 19-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் எதிர்மனுதாரர்களான தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, தென்னிந்திய திரைப்படம் மற்றும் டி.வி., தயாரிப்பாளர் கில்டு ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, வழக்கை ஜுலை 25-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதுவரை படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர், வழக்கு விசாரணையை ஆகஸ்டு 1-ந் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அதுவரை 'துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்தப் படத்தை வரும் அக்டோபரில் வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால் ஆகஸ்ட் வரை தடை தொடர்கிறது. இதனால் படம் குறித்து விளம்பரம் செய்யக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்த நல்ல துப்பாக்கியை கள்ளத்துப்பாக்கி என்ன பண்ணிவிட முடியும் என கூறிவந்தனர். போகிற போக்கைப் பார்த்தால்....

 

Post a Comment